ரஜினி முதல் தோனி வரை.. கோலாகலமாக நடைபெற்ற அம்பானி குடும்ப திருமண நிகழ்விற்கு படையெடுத்த பிரபலங்கள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் திருமண விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அம்பானி குடும்பம்
அம்பானி குடும்பம்எக்ஸ் தளம்
Published on

உலக பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் விரன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று, மும்பையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா குடும்பத்தினருடனும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடனும், இயக்குநர் அட்லி தன் மனைவியுடனும் கலந்துகொண்டனர். செம்ம ஸ்டெப் போட்டு அசத்தல் நடனமும் ஆடினார் நடிகர் ரஜினிகாந்த்!..

கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர், தோனி தன் மனைவி மற்றும் மகளுடனும், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பாலிவுட்டில் இருந்து சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமணம் அம்பானி குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கை உலகிற்கு காட்டும் வகையில் அமைந்துள்ளது.

முன்னதாக, திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து, ஆடம்பர பரிசுகளுடன் நடத்தப்படுகையில், ரிலையன்ஸ் ஊழியர்களும் விழாவைக் கொண்டாட ஒரு பரிசுப் பெட்டி தொகுப்பை பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க: ”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!

அம்பானி குடும்பம்
ரூ.2,675 கோடி செலவில் அம்பானி வீட்டு திருமணம்.. உலகையே வியக்க வைத்த சில திருமணங்கள் - ஓர் பார்வை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com