முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..

முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
Published on

பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை என இன்றைய முக்கிய செய்திகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

* பொது முடக்கத்தை கடைசி ஆயுதமாகத்தான் மாநில அரசுகள் கையில் எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

* டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று காலைக்குள் கொடுக்காவிட்டால் பெரும் குழப்பம் விளையும் என மாநில அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

* இரவு நேர ஊரடங்கு நேரம் முடிந்ததும் வெளியூர் பயணங்களை மக்கள் தொடங்கினர். காய்கறி சந்தைளும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கின. பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன.

* தமிழகத்திற்கு கடந்த 11ஆம் தேதி வரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் 12.10% வீணானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதிகமான தடுப்பூசி மையங்கள் இருப்பதால் மருந்துகள் வீணாக வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தெரிவித்துள்ளார். 

* கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்து மீதான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. நாட்டின் பல பகுதிகளிலும் பற்றாக்குறை நிலவும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

* நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. சென்னையில் நடைபெற்ற போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

* உத்தரபிரதேச மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களில் பொது முடக்கம் அமல்படுத்துமாறு, உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

* தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

* மாநிலங்களுக்கு தேவைப்படும் கொரோனா தடுப்பூசிகள் முழவதையும் மத்திய அரசு இலவசமாக வழங்கவேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

* ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com