விறுவிறுப்பாக நடந்த பிரான்ஸ் 2ஆம் சுற்று தேர்தல்... சென்னை, புதுச்சேரியில் வாக்குப்பதிவு!

பிரான்ஸ் நாட்டில் 2 ஆம் சுற்று நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதரகங்களிலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
பிரான்ஸ் வாக்குப்பதிவு
பிரான்ஸ் வாக்குப்பதிவுமுகநூல்
Published on

செய்தியாளர்: ரஹ்மான்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், விறுவிறுப்புடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2 ஆம் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 577 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான முதல் சுற்று தேர்தலில் தீவிர வலதுசாரி கூட்டணி கட்சிகள் அதிக சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தது.

இடதுசாரி கட்சிகள் 2 ஆவது இடத்தையும், ஆளும் மையவாத கட்சி 3 ஆவது இடத்தையும் பிடித்தன. முதல் சுற்றில் 12.50 சதவீத வாக்குகள் பெற்ற வேட்பாளர் மட்டுமே 2 ஆவது சுற்றில் போட்டியிட முடியும். 76 தொகுதிகளில் முதலிடம் பிடித்த வேட்பாளர் மட்டுமே 12.50 சதவீத வாக்குகள் பெற்றதால், அவர்கள் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, 2 ஆம் சுற்று தேர்தலில் 501 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றன. இதில் இந்தியா உள்ளிட்ட 42 ஆசிய நாடுகளுக்கான ஒரு தொகுதிக்கும் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியாவில் டெல்லி, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள தூதரகங்களில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

பிரான்ஸ் வாக்குப்பதிவு
மொத்தமாக மாறப்போகும் செம்பாக்கம் ஏரி! இதுதான் திட்டமா.. வடிவமைப்பு, வரைவு திட்டம் தயாரிப்பு

புதுச்சேரியில் உள்ள துணை தூதரகத்திலும் பிரான்ஸ் குடியுரிமைப் பெற்றவர்கள் வாக்கினை பதிவு செய்தனர். வலதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனியார் மயமாக்கல், வெளிநாட்டினருக்கு குடியுரிமை உள்ளிட்ட பிரச்னைகள் எழும் என்பதால், இடதுசாரி மற்றும் ஆளும் மையவாத கட்சிகள் கைகோர்த்துள்ளன.

வாக்குகள் பிரியாமல் தடுக்கும் வகையில், தங்களது கட்சிகளை சேர்ந்த 228 வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்துள்ளனர். இதனால், நேற்று நடைப்பெற்ற வாக்குப்பதிவு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. மேலும், இன்று யார் பிரான்ஸ் நாட்டில் ஆட்சியமைக்க உள்ளார்கள் என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com