ரபேல் விமானங்களில் பாக்.விமானிகளுக்கு பயிற்சியா? பிரெஞ்ச் தூதர் மறுப்பு

ரபேல் விமானங்களில் பாக்.விமானிகளுக்கு பயிற்சியா? பிரெஞ்ச் தூதர் மறுப்பு
ரபேல் விமானங்களில் பாக்.விமானிகளுக்கு பயிற்சியா? பிரெஞ்ச் தூதர் மறுப்பு
Published on

பாகிஸ்தான் விமானப்படை விமானிகளுக்கு ரஃபேல் விமானத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை இந்தியாவுக்கான பிரெஞ்ச் தூதர் மறுத்துள்ளார்.

ரபேல் போர் விமானங்களில், கடந்த 2017 ஆம் ஆண்டு கத்தார் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சிப் பெற்ற அதிகாரிகளை  பாகிஸ்தானுடன் கத்தார் பகிரிந்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தச் செய்தியை பிரெஞ்ச் தூதர் அலெக்ஸாண்டர் சீக்லர் மறுத்துள்ளார்.

கத்தார், 24 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2015 ஆண்டு ஒப்பந்தம் செய்ததாகவும் 2017 ஆண்டு மேலும் 12 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ததாகவும் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், இதில் பாகிஸ்தான் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் பிரெஞ்ச் தூதர் மறுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com