டெல்லியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
’டெல்லியில், அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள் ளதாகவும் அதன்மூலம், அவர்கள் பாதுகாப்பான பயண அனுபவத்தை உணர முடியும் என்றும் கட்டணத்தின் அடிப்படையில் அவர்கள் வாகனத்தை தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை’ என்றும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.
’டிக்கெட் வாங்கியும் பெண்கள் பயணிக்கலாம். டிக்கெட் வாங்கி பயணிக்க முடிந்தவர்கள், அப்படி பயணிப்பதை ஊக்கப் படுத்து கிறோம்’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பேருந்துகளில் இந்தத் திட்டம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பெண்கள் டிக்கெட் வாங்காமல் இலவசமாக பேருந்துகளில் இன்று தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.