திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக நேர ஒதுக்கீடு வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார்.
150 கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு இலவசமாக பதிவு செய்யப்பட்ட டோக்கன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறியுள்ளார். 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் சோதனை முறையில் டோக்கன் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பக்கதர்கள் அறைகளில் தங்கவைக்கப்பட்டு தரிசனத்திற்காக அனுப்பப்படுவது தவிர்க்கப்படும்