திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப். 12 முதல் இலவச தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப். 12 முதல் இலவச தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஏப். 12 முதல் இலவச தரிசனம் ரத்து
Published on

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 12) முதல் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் கடந்த ஒரு வாரமாக 23 ஆயிரம் டிக்கெட்டுகளில் இருந்து 15,000 ஆக குறைக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை திருப்பதி மற்றும் ஆந்திராவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை மற்றும் அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் திங்கட்கிழமை வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இந்த இரண்டு தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்களும் மூடப்பட உள்ளதாகவும் அதன் பிறகு ரூபாய் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com