திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம், இலவச தரிசன டோக்கன் வழங்கும் முறையை தேவஸ்தானம் ரத்து செய்தது.
தற்போது புரட்டாசி மாதம், நவராத்திரி பிரம்மோற்சவம் என அனைத்து உற்சவங்களும் முடிவடைந்த நிலையில், மீண்டும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் முறையை தொடங்கவேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கோப்புப் படம்
பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற திருப்பதி கோயில் நிர்வாகம், மூன்று மாதங்களுக்குப் பிறகு இலவச தரிசன டோக்கன் விநியோகத்தைத் தொடங்கியது. இன்று (அக்டோபர் 26) முதல் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி வளாகத்தில் ஆதார் அட்டையைக் காட்டி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.