நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகும் தொழிலதிபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகும் தொழிலதிபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டம் மக்களவையில் கடந்த 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டாலும் தொடர் அமளி காரணமாக அது நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அச்சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோர் இந்தியாவில் பொருளாதார குற்றங்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அதில் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.