ரூ.30 ஆயிரம் கோடி| கடற்படைக்கு ரபேல் போர் விமானங்கள்.. பிரான்ஸ் அரசுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை!

விமானம்தாங்கி கப்பல்கள் மற்றும் கடற்படை விமானத் தளங்களில் பயன்படுத்த 26 நவீன ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை மத்திய அரசு மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
ரபேல், பிரான்ஸ், இந்தியா
ரபேல், பிரான்ஸ், இந்தியாஎக்ஸ் தளம்
Published on

இந்திய கடற்படைக்கு ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய பிரான்ஸ் நாட்டுடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விமானம்தாங்கி கப்பல்கள் மற்றும் கடற்படை விமானத் தளங்களில் பயன்படுத்த 26 நவீன ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை மத்திய அரசு மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தாசோ நிறுவனம் தயாரிக்கும் இந்த விமானங்களை இந்தியா-பிரான்ஸ் அரசுகளிடையே ஒப்பந்தம் உண்டாக்கி கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள்படி, 26 ரபேல் விமானங்களின் விலை ரூ.30 ஆயிரம் கோடிவரை இருக்கும் என பிரெஞ்சு அரசு தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை கோரும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் அடிப்படையில், விமானங்களின் இறுதி விலை அமையும் எனக் கருதப்படுகிறது.

தேசிய பாதுகாப்புச் செயலர் அஜித் தோவல் தற்போது பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரபேல் பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவுசெய்ய அவர் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு அரசும் இந்தியாவுடன் விரைவிலே ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது என்றாலும், விமானங்களில் விலை தொடர்பான பேச்சுவர்த்தைகள் நிலுவையில் உள்ளதால், இதற்கான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பது இன்னும் இறுதியாகவில்லை.

ரபேல், பிரான்ஸ், இந்தியா
ரபேல் விமானங்களில் பாக்.விமானிகளுக்கு பயிற்சியா? பிரெஞ்ச் தூதர் மறுப்பு

இந்திய விமானப்படைக்கு ஏற்கெனவே 36 ரபேல் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம், உச்ச நீதிமன்றம்வரை சென்றது குறிப்பிடத்தக்கது. ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விமானப்படைக்காக 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்தது. ஒரு விமானத்தின் விலை சராசரியாக 1.660 கோடி ரூபாய் என்பது வழக்கமான விலையைவிட அதிகம் என ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டிய நிலையில், விமானத்துடன் முதல் செய்யப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக விலை மாறுபடுவதாக மத்திய அரசு தனது தரப்பை விளக்கியது.

தேசிய பாதுகாப்பு காரணங்களால் ரபேல் விமானத்துடன் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என்பது மத்திய அரசின் வாதம். இந்தியாவின் கிழக்கு எல்லையில் சீன அச்சுறுத்தல் காரணமாக, விரைவாக ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ததாகவும், முந்தைய காங்கிரஸ் அரசு இந்த நடவடிக்கையை தாமதப்படுத்தியதாகவும் பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியது.

இப்படி ரபேல் தொடர்பான பின்னணி சர்ச்சையாக உள்ள நிலையில், மத்திய அரசு கடற்படைக்காக நவீன ரக ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் நிதானமாகச் செயல்பட்டு வருகிறது.

பிரெஞ்சு அரசு 26 ரபால் விமானங்களின் விலை ரூ.30 ஆயிரம் கோடி என குறிப்பிட்டபோதிலும், விலையை 20 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்க வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரபேல், பிரான்ஸ், இந்தியா
ரபேல் பேர ஊழல் பற்றிய புத்தக வெளியீட்டுக்குத் தடை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com