இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு மசாலா டீ....பிரதமர் மோடியின் உபசரிப்பு!
75ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் இருநாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்திறங்கிய அவரை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். பின்னர் அம்பர் கோட்டையை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சுற்றிப் பார்த்தார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இருவரும் பேரணியாக சென்றனர். ஹவா மகாலை இருவரும் பர்த்து ரசித்தனர். அங்குள்ள கைவிணைப் பொருட்கள் கடை ஒன்றிற்கு இரண்டு தலைவர்களும் சென்றபோது அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி ஒன்றை வாங்கி பிரான்ஸ் அதிபருக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார். அங்கிருந்த தேநீர் கடையில் மசாலா டீ இமானுவேல் மேக்ரானுக்கு வாழங்கப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து, இந்தியர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இமானுவேல் மேக்ரான்