இந்தியாவின் நான்கு முக்கியமான ஐடி நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் 2.4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன. முந்தைய நிதி ஆண்டில் 90,813 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன.
வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும். தற்போது சந்தையில் தேவையும் உயர்ந்திருப்பதால் ஐடி நிறுவனங்களில் இருந்து வெளியேறுவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் டிசிஎஸ் மட்டும் 1 லட்சத்துக்கு மேல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 5.9 லட்சமாக உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 40,000 பணியாளர்களை நியமிக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 54,396 நபர்களை வேலைக்கு எடுத்திருக்கிறது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3.1 லட்சமாகும். நடப்பு நிதி ஆண்டில் 50,000 பணியாளர்களை வேலைக்கு எடுக்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டிருக்கிறது.
விப்ரோ நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 45,416 நபர்களை வேலைக்கு எடுத்திருக்கிறது. விப்ரோ நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 2.4 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 39,900 வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.