பான் கார்டு, சிம் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் எண் அறிமுகம் செய்யப்பட்டபோது சமூக நலத்திட்டங்களுக்கு மட்டும் தான் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இன்று ஆதார் எண் எல்லாவற்றிற்கும் கட்டாயமாகி வருகிறது. விமான நிலையத்தில் நுழைவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியம் முதல், வங்கிக் கணக்கு, பான் எண், செல்போன் எண் உள்பட பல ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடைசியாக ஆதாருடன் இணைக்கப்படாத சிம் கார்டுகளின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனால் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த பலரும் தங்களது ஆதார் எண்ணை சிம் கார்டுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதார் இணைப்புக்கான காலக்கெடு தேதிகள்:
சிம் கார்டு - பிப்ரவரி 2018
பான் கார்டு - டிசம்பர் 31, 2017
வங்கி கணக்குகள் - டிசம்பர் 31, 2017
சமூக நலத் திட்டங்கள் - டிசம்பர் 31, 2017
இதனிடையே, ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.