ஊழல் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது - பஞ்சாபில் பரபரப்பு

ஊழல் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது - பஞ்சாபில் பரபரப்பு
ஊழல் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது - பஞ்சாபில் பரபரப்பு
Published on

பஞ்சாபில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சாது சிங்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சாது சிங் தரம்சோட். இவர் தனது பதவிக்காலத்தின்போது வனப்பகுதியில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டுவதற்கு லஞ்சம் பெற்றதாக அண்மையில் புகார் எழுந்தது. ஒரு மரத்துக்கு ரூ.500 என்ற வீதத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு இவ்வாறு அவர் லஞ்சம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் பகவந்த் மானின் உத்தரவின் பேரில் இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் மொஹாலி வனத்துறை அதிகாரி குர்னாம்ப்ரீத் சிங், ஒப்பந்ததாரர் ஹர்மீந்தர் சிங் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முன்னாள் அமைச்சர் சாது சிங்குக்கு இதில் தொடர்பு இருப்பது ஊர்ஜிதமானது. இதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சாது சிங்கை இன்று அதிகாலை கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com