புதுச்சேரி அரசில் இருமுறை அமைச்சராகவும், சபாநாயகர், மற்றும் எம்.பி.யாகவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்தவர் கண்ணன். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் புதுச்சேரி பிரிவு தலைவராக இருந்தார்.
இதையடுத்து அங்கிருந்தும் வெளியேறி தனியாக 2 கட்சிகளையும் நடத்தினார். 2016-ல் அதிமுகவில் இணைத்து பேரவை தேர்தலில் களம்கண்டு தோல்வியடைந்தார். இறுதியாக பாஜகவில் சேர்ந்த அவர், அங்கிருந்தும் விலகினார்.
இந்நிலையில், கடந்த சிலமாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணன் காலமானார். மறைந்த கண்ணனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர், துணை நிலை ஆளுநர் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.