இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நண்பகல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவதற்காக அனுமதிக்கப்பட்டார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டுள்ள சூழலில் தொடர்ந்து கவலைக்கிடமாக அவர் இருப்பதாக ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நண்பகல் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் பெரிய உறைவு இருந்ததால் அவசரகால உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.