மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
Published on

உள்துறை அமைச்சகத்தில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விஷயங்களுக்கு பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார். இவர் மத்திய அரசின் பல உயரிய பதவிகளில் பணிபுரிந்துள்ளார். ஓய்விற்கு பிறகும் இவர்  ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீராகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரது ஆலோசகர் பணி நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாத பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்க உள்துறை அமைச்சகத்தில் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 67 வயதாகும் விஜயகுமாரின் இப்போதைய நியமனத்தின் பதவிக்காலம் ஓராண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார், சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் சிறப்பு அதிரடிப் படையை தலைமையேற்று நடத்தியதுடன், வீரப்பனை சுட்டுக் கொன்று பிரபலமானவர். இவரின் ஐபிஎஸ் பதவிக்காலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இவர் ஆலோசகராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com