மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரியாக முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி இன்று பொறுப்பேற்றார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற விழாவில், ராஜிவ் மெஹ்ரிஷிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சிஏஜி அமைப்பின் தலைவராக, 3 ஆண்டுகளுக்கு இவர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தணிக்கை அதிகாரியாக இருந்த சசிகாந்த் சர்மா கடந்த வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்ற நிலையில், 62 வயதான ராஜிவ் இன்று அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.