பித்தப்பை தொற்று மற்றும் மேலும் சில பாதிப்புகளுடன் ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 2014ஆம் ஆண்டு சாய்பாபா கைது செய்யப்பட்டார். 3 ஆண்டு விசாரணைக்கு பின், 2017ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகபுரி செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர் சாய்பாபாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உரிய ஆதாரம் இல்லை என குறிப்பிட்டு, அவரை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் விடுவித்தது. சுமார் 10 ஆண்டுக்கால சிறைவாசத்திற்கு பின் மார்ச் மாதம் ஜி.என்.சாய்பாபா சிறையில் இருந்து வெளிவந்தார்.
தொடர் உடல்நல பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் போதும், வெளியில் வந்த பிறகும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.