மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிவசேனா யுபிடி கட்சியின் தலைவராக இருக்கும் உத்தவ் தாக்கரே, மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
அவருக்கு இதயத்தின் தமனி பகுதியில் அடைப்புகள் இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு, உத்தவ் தாக்கரேவுக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது அவரது இதயத்தில் 3 முக்கிய தமனிகளில் இருந்த அடைப்புகளை மருத்துவர்கள் நீக்கினர். இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டும் ஒரு முறை அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு அடைப்பு இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.