சட்டம்-ஒழுங்கு விவகாரம்|சந்திரபாபுவிடம் பேச தைரியமிருக்கா? பவன் கல்யாணைச் சாடிய ஜெகன் மோகன் ரெட்டி!

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு விவகாரம் குறித்து முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் விமர்சித்துள்ளார்.
கேசிஆர்., பவன் கல்யாண், ஜெகன் மோகன்
கேசிஆர்., பவன் கல்யாண், ஜெகன் மோகன்எக்ஸ் தளம்
Published on

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். துணை முதல்வராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளார். இதற்கிடையே மாநிலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும்; இல்லாவிடில் உள்துறையையும் நானே ஏற்பேன்” என பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், அனிதாவை வெளிப்படையாக விமர்சித்த அவர், தனது கடமைகளில் இருந்த அனிதா தவறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். கூட்டணியில் உள்ள கட்சித் தலைவரே ஆளும் அரசை விமர்சித்தது ஆந்திர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்க்கட்சியும் கடுமையாக விமர்சித்திருந்தது.

இதையும் படிக்க: அமெரிக்கா | ட்ரம்பின் விசுவாசி.. சிஐஏ அமைப்பின் தலைவராகும் இந்தியர்.. யார் இந்த காஷ்யப் படேல்?

கேசிஆர்., பவன் கல்யாண், ஜெகன் மோகன்
“சரியில்லை எனில், அந்த துறையையும் நானே ஏற்பேன்” - உள்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்த பவன் கல்யாண்!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரோஜா, ”உள்துறை அமைச்சர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்தத் தவறிவிட்டார் என்று துணை முதல்வர் பவன் கல்யாணே தெளிவுப்படுத்திவிட்டார். வெறும் 120 நாட்களில் பெண்கள் மீதான தாக்குதல்கள் 100-க்கும் மேற்பட்டவை. இதுபற்றி உள்துறை அமைச்சர் என்ன சொல்லப்போகிறார்? உள்துறை அமைச்சர் பதவி விலகுவாரா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் விமர்சித்துள்ளார். ”சட்டம் - ஒழுங்கு யாருடைய பொறுப்பு? அது முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இல்லையா? சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என்றால், பவன் கல்யாண் யாரைக் கேள்வி கேட்க வேண்டும்? சந்திரபாபு நாயுடுவை இல்லையா? அவரை கேள்வி கேட்க பவன் கல்யாணுக்கு தைரியமில்லை. அதனால்தான் அவர் அமைச்சரைக் கடிந்துகொள்கிறார். அவர், படத்தில் பேசுவது போன்று வசனங்களைப் பேசி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அதிபர் தேர்தல் | கமலா கோட்டைவிட்டது எங்கே? ட்ரம்ப் தட்டித் தூக்கியது எங்கே? 13 முக்கிய பாயிண்ட்ஸ்!

கேசிஆர்., பவன் கல்யாண், ஜெகன் மோகன்
’சட்டம் ஒழுங்கு சரியில்லை..’ பவன் கல்யாண் பேச்சை கையிலெடுத்த ரோஜா.. பதிலடி கொடுத்த வங்கலபுடி அனிதா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com