இந்தியாவில் கொரோனா ஆய்வுக்காக முதல் பெண்ணாக தன் உடலை தானமாக அளித்த 93 வயது மூதாட்டி!

இந்தியாவில் கொரோனா ஆய்வுக்காக முதல் பெண்ணாக தன் உடலை தானமாக அளித்த 93 வயது மூதாட்டி!
இந்தியாவில் கொரோனா ஆய்வுக்காக முதல் பெண்ணாக தன் உடலை தானமாக அளித்த 93 வயது மூதாட்டி!
Published on

கோவிட் 19 கொரோனா காரணமாக உயிரிழந்த கொல்கத்தாவை சேர்ந்த 93 வயதாகும் ஜோத்ஸ்னா போஸ் என்ற பெண்மணியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், பெண் ஒருவரின் உடல் 'மனித உடலில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய ஆய்வு'க்காக,  தானமாக வழங்கப்படுவது, இதுவே முதன்முறை. இவர் தொழிற்சங்க தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணாக இவர்தான் கொரோனா ஆய்வுக்காக உடல்தானம் செய்யும் முதல் நபர் என்றபோதும், இவருக்கு முன்னராக, தன்னார்வ அமைப்பான ‘கன்டர்பான்’ அமைப்பின் நிறுவனர் ப்ரோஜோ ராய் அவரது உடலை தானமளித்திருந்தார். ஆக, பாலின் வித்தியாசமின்றி பார்த்தால், ப்ரோஜோ ராய்தான் கொரோனா ஆய்வுக்காக உடல் தானமளித்த முதல் நபர். இவர்களைத் தொடர்ந்து கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கும் கண் மருத்துவர் பிஸ்வஜித் என்பவர், தன்னுடைய உடலையும் தானம் செய்ய இப்போதே ஒப்புதல் அளித்திருக்கிறார்.

ஜோத்ஸ்னா போஸின் பேத்தியான டிஸ்தா பாசு, மருத்துவராவார். இவர் பேசுகையில், “என்னுடைய பேத்தி, ஆர்.கே.கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த செவ்வாயன்று நோயியியல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நான் நோயியல் துறையில் முதுகலை படிக்கிறேன். கொரோனா முற்றிலும் புதிய நோய் என்பதால், எங்களைப் போன்ற பலருக்கும் இதன் தன்மை பற்றி விரிவாக தெரியாது. இது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நாங்கள் தெரிந்துக்கொள்ள, இதுபற்றி நாங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் புரிதல் வரும். அந்த ஆய்வுக்கு, நோயியல் பிரேத பரிசோதனை எங்களுக்கு உதவும்” எனக்கூறியுள்ளார்.

ஜோத்ஸ்னா போஸ், கடந்த 1927 ம் ஆண்டு, வங்கதேசத்திலுள்ள சிட்டகாங்க் பகுதியில் பிறந்தவர் ஆவார். இவரின் தந்தை, இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவிலிருந்து திரும்பிவந்தபோது, வழியில் தவறிவிட்தாகவும், அந்த நேரத்தில் இவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டதாகவும் அம்மாநில ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சூழ்நிலை காரணமாக, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவர், பிரிட்டிஷ் டெலிபோன்ஸில் ஆப்பரேட்டராக இருந்திருக்கிறார்.

தகவல் உறுதுணை : Republic World

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com