நாட்டில் காடுகளின் பரப்பளவு ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் காடுகளின் பரப்பளவு ஒரு சதவிகிதம் அதிகரித்திருப்பது செயற்கைகோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ள தாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பாஜக எம்.பி மேனகா காந்தி, செயற்கைக் கோள் புகைப்படங்கள், கரும்பு சாகுபடியையும் சேர்த்து கணக்கிட்டிருக்கக் கூடும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆண்டில் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால், 3 மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக விளக்கமளித்தார். மேலும், செயற்கைக்கோள் புகைப்படங்களை அடிக்கடி ஆய்வு செய்வதாகவும், தற்போது நாட்டில் 24 புள்ளி 39 சதவிகிதம் பகுதிகள் பசுமையாகத் தெரிவித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், நெடுஞ்சாலைகளில் 125 கோடி மரங்கள் நடப்பட்டிருப்பதாகவும் மக்களவையில் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்தார்.