பங்கு சந்தை
பங்கு சந்தைபுதிய தலைமுறை

வாரத்தின் இறுதி நாள்.. இதுவரை இல்லாத உச்சத்தில் இந்தியப் பங்குச் சந்தைகளின் வர்த்தகம்! பின்னணி என்ன?

வாரத்தின் இறுதி வணிக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சத்தில் வர்த்தகத்தை தொடங்கின.
Published on

வாரத்தின் இறுதி வணிக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சத்தில் வர்த்தகத்தை தொடங்கின.

வர்த்தக தொடக்கத்தில், மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 502 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 82 ஆயிரத்து 637 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது.

தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 105 புள்ளிகள் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத உயர்வாக 25 ஆயிரத்து 257 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஆசியப் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் அந்நிய முதலீடுகள் பங்குச்சந்தைகளுக்குள் அதிகளவில் வந்தது போன்றவையே ஏற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அந்நிய முதலீட்டாளர்கள் நேற்று 3 ஆயிரத்து 259 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளில் முதலீடு செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதேபோல, உள்நாட்டு நிதிநிறுவனங்களும் சந்தைகளில் 2 ஆயிரத்து 690 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்துள்ளனர். சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 23 சென்ட் அதிகரித்து 80.12 டாலரில் வர்த்தகமாகியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com