மோடிக்கு பிறந்த நாள் பரிசாக ஆந்திர விவசாயிகள் ஆயிரக்கணக்கான 68 பைசா மதிப்பிலான காசோலைகளை பிரதமருக்கு அனுப்பி உள்ளனர்.
ஆந்திராவின் ராயல்சீமா, கர்னூல், கடப்பா, அனந்தபூர் மற்றும் சித்தூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் நீர் பாசன வசதிக்கு உதவி கேட்டும் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் 68 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொண்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் இருந்து 68 பைசா காசோலைகளைப் பெற்று பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளது. விவசாயிகளின் அவல நிலையை உணர்த்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.