பால் மற்றும் பால் சாரந்த பொருட்களை விற்பனை செய்யும் சில உணவு நிறுவனங்கள், ‘ஏ1 மற்றும் ஏ2’ என்று வகைப்படுத்தி பால், நெய், தயிர் போன்ற பொருட்களை விற்பனை செய்துவருகின்றன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிப்படி, இதுபோன்று எந்த இடத்திலும் ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தவில்லை என்பதால், இது விதிமீறலாக பார்க்கப்படுகிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய எண் அல்லது பதிவுத் தொடர்பு எண்களில் இந்த விதிமீறல் செய்யப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, இந்த உரிமைகோரல் லேபிள்களை அந்தந்த உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உடனடியாக நீக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, ஆன்லைன் வர்த்தக தளங்களில் இருந்தும் ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து உரிமை கோரல்களையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக எந்த ஒரு உணவு நிறுவனங்களுக்கும் கால அவகாசம் வழங்கப்படாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.