மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் முதலாவது முழு பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் அமைந்துள்ளது.
தொடர்ந்து 7ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ந்து அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்க உள்ளார்.
இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிகளில் சலுகைகள் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையை காலை 11 மணிக்கு நிகழ்த்தவுள்ளார்.