“GST-யால் மாநிலங்களுக்கு நன்மையே” - முதல்வர் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் பதில்

தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “30-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களை அவர்கள் தருவதில்லை” என்று பேசி இருந்தார்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு இன்று பதிலளித்துள்ளார். இது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர், அதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
“சிறுபிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அதில், “இது முற்றிலும் புரிதல் குறைபாடான வாதம். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி சட்டம் அமல் செய்யப்பட்டபோதே, ஜிஎஸ்டி இழப்பீடு 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டிக்கு பின்பு தமிழகத்தின் வரிவருவாய் 14.80 சதவீதமாக உயர்ந்திருப்பது, தமிழக அரசுக்கு லாபம்தானே. ஜிஎஸ்டிக்கு முன்பு இருந்ததைவிட மாநிலங்களின் வரிவருவாய் வளர்ச்சி தற்போது உயர்ந்துள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வரிவருவாய் வளர்ச்சி ஜிஎஸ்டிக்கு பின்பு செம்மையாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com