உத்தரகண்ட் மாநிலம் பித்தோரகர் (Pithoragarh) பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாரம் கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக திடீரென கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாரம் கிராமத்தின் பாலம் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.