ம.பியில் முதல்வரை எதிர்த்து களமிறக்கப்படும் நடிகர்.. 5 மாநில தேர்தலில் காங். வேட்பாளர்கள் ஒரு பார்வை

கடந்த 2018ன் ஆம் ஆண்டு நடந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே வெற்றி பெற்றது.
congress
congresspt web
Published on

ஐந்து மாநில தேர்தல்

தேசத்தின் ஒட்டுமொத்த கவனமும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை நோக்கியே உள்ளது. சத்திஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான் என ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடக்கும் தேதிகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆட்சி இழந்த மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை அமைக்கவும் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆட்சியை தக்கவைக்கவும் இரண்டு தேசிய கட்சிகளும் பல்வேறு வியூகங்களை அமைத்து வருகின்றன.

சத்திஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும் மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. சத்திஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் டிசம்பர் 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

congress
இந்தியா - பாக். போட்டியின் போது Hotstar-ஐ திணற வைத்த ரசிகர்கள்; உச்சம் தொட்ட பார்வையாளர் எண்ணிக்கை!

முதற்கட்ட வேட்பாளர்கள்

காங்கிரஸ் ஐந்து மாநிலங்களில் 4 மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேசத்திலுள்ள 230 தொகுதிகளில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். சத்திஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 55 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் 39 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கமல்நாத்
முன்னாள் முதல்வர் கமல்நாத்

பாஜக முதல்வர் வேட்பாளரை எதிர்த்து களமிறக்கப்படும் நடிகர்

மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை சிந்த்வாரா தொகுதியில் முன்னாள் முதல்வர் கமல்நாத் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங் சச்சௌரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். ரகோகர் தொகுதியில் முன்னாள் முதல்வரின் மகன் ஜெய்வர்தன் சிங் நிறுத்தப்பட்டுள்ளார்.

congress
உலகை உலுக்கும் ஹமாஸின் ரகசிய சுரங்கம்! 100 அடிக்கு கீழே.. இவ்வளவு தூரமா??

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போட்டியிட்ட புத்னி தொகுதியில் நடிகர் விக்ரம் மஸ்தலை வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ். 2008 ஆம் ஆண்டில் வெளியான தொலைக்காட்சித் தொடரான ரமாயணத்தில் அனுமார் வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர் விக்ரம் மஸ்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், பழங்குடியினத்தைச் சேர்ந்த 30 வேட்பாளர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ அம்பிகாபூரில் மீண்டும் களம்காண்கிறார். முதல்வர் பூபேஷ் பாகேல் படானில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது மருமகனும் பாஜக தலைவருமான விஜய் பாகேலை தேர்தலில் எதிர்கொள்கிறார். காங்கிரஸ் மாநில தலைவர் அமர்ஜீத் பகத், சீதாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். சத்தீஸ்கரில் அறிவிக்கப்பட்ட 30 வேட்பாளர்களில் 14 பேர் பழங்குடியினத்தவர்கள். இந்த முதல் பட்டியலில் 3 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

congress
பெரம்பலூரை அதிரவைத்த Happy Street.. 3 மணி நேரத்துக்கு மேல் உற்சாகமாக ஆடிய இளைஞர்கள்..!

தெலுங்கானா

தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் 55 வேட்பாளர்கள் அறிவிக்கபட்டுள்ளனர். கோடங்கல் தொகுதியில் அனுமுலா ரேவந்த் ரெட்டியும், ஹுசூர்நகர் தொகுதியில் உத்தம் குமார் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். தாசரி சீதக்கா, முலுகுவில் போட்டியிடுகிறார், மைனம்பள்ளி ரோஹித் ராவ் மேடக் தொகுதியிலும், ஹனுமந்த் ராவ் மல்காஜ்கிரியில் போட்டியிடுகின்றனர்.

விலகிய காங். மூத்த தலைவர்

இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் மூத்த தலைவர் பொன்னால லக்ஷ்மையா கட்சியில் இருந்து விலகியுள்ளார். வேட்பாளர்கள் தேர்வில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக எழுந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அவர் பிஆர்எஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றி பெற்றும் ம.பி.யில் ஆட்சியிழந்த காங்கிரஸ்

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் இந்த ஐந்து மாநில தேர்தல் இண்டியா மற்றும் என்.டி.ஏ. கூட்டணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த 2018ன் ஆம் ஆண்டு நடந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தெலுங்கானாவில் கே.சி.ஆர். தலைமையிலான ராஷ்டிரிய சமிதி கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சியில் அமர்ந்தது.

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 2020 ஆம் ஆண்டு தற்போது மத்திய அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் அரசு ஆட்சியிழந்தது குறிப்பிடத்தக்கது.

congress
இளையான்குடி: தொடக்கப்பள்ளி வகுப்பறையில் ஒழுகும் மழைநீர்.. குடைபிடித்தபடி அமர்ந்திருக்கும் மழலைகள்!

ஆனால் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சத்திஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 9ல் பாஜக வெற்றி பெற்றது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com