எல்லையில் 5 இந்தியர்களை கடத்திச் சென்ற சீனா ராணுவம்?

எல்லையில் 5 இந்தியர்களை கடத்திச் சென்ற சீனா ராணுவம்?
எல்லையில் 5 இந்தியர்களை கடத்திச் சென்ற சீனா ராணுவம்?
Published on

அருணாச்சலப் பிரதேச எல்லையில் 5 இந்தியர்களை சீனா ராணுவத்தினர் கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையிலான எல்லை பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீன ராணுவம் (பி.எல்.ஏ) அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து ஐந்து இளைஞர்களை கடத்தியதாக கூறப்படுகிறது. உள்ளூர் ஊடக செய்திகளின்படி, ஐந்து பேரும் அண்டர் நாச்சோ வட்டத்தில் உள்ள செரா 7 ரோந்து இடத்திலிருந்து கடத்தப்பட்டனர்.

ரஷ்யா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்களை ராஜநாத் சிங் சந்திக்கும் நேரத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளதாக அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார்.

எனினும், தேஸ்பூர் தலைமையகத்தை தளமாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் அத்தகைய கடத்தல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று இந்த செய்தியை மறுத்தார். காணாமல் போனவர்களின் அறிக்கை எதுவும் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com