மத்தியப் பிரதேசம் | 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்!

மத்தியப் பிரதேசத்தில் விவசாயி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டும், தரையில் மர்மமான முறையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மர்ம மரணம்
மத்தியப் பிரதேசம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மர்ம மரணம்ட்விட்டர்
Published on

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரவ்டி கிராமத்தில் வசித்து வருபவர், ராகேஷ் தோத்வா. கொத்தனாராக பணிபுரிந்துவரும் இவருக்கு வயது 27. இவருக்கு லலிதா தோத்வா என்பவருடன் திருமணமான நிலையில், 9 வயதில் லஷ்மி என்ற மகளும், 7 வயதில் பிரகாஷ், 5 வயதில் அக்ஷய் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) காலை 9.20 மணியளவில் அவர்களின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸார் தெரிவிக்கையில், “ராகேஷ், அவரது மனைவி லலிதா, அவர்களின் பிள்ளைகள் இருவர் வீட்டின் கூரையில் அடுத்தடுத்தது தூக்கிலிடப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மகள் லஷ்மி மட்டும் தரையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் காலை 6 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து தற்போது விசாரித்து வரும் அதிகாரிகள், இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வீட்டில் ஏதேனும் கடிதம் உள்ளதா என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே இது தற்கொலையா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தற்கொலை
தற்கொலைPT

தொடர்ந்து இறப்பிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாய்ப்படை மற்றும் தடவியல் குழுவினர் கைரேகளை சேகரித்து வருகின்றனர். இதற்காக அலிராஜ்பூரின் துணைப்பிரிவு காவல் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மர்ம மரணம்
“2014க்குப் பிறகு ஒட்டுண்ணியாக மாறிவிட்டது காங்.” - மக்களவையில் காட்டமாக விமர்சித்த பிரதமர் மோடி!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com