முதல்முறை MLA... ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு!

அரசியலில் மிகப்பெரிய உயரங்களை எட்டுவது சிலருக்குப் போராட்டமாக இருக்கலாம். இருப்பினும் ஒரு சிலருக்கு மிக எளிதாக அது கிடைத்து விடுகிறது. அப்படியான ஒருவரை பற்றியே இங்கு பார்க்க போகிறொம்.
பஜன்லால் சர்மா
பஜன்லால் சர்மாட்விட்டர்
Published on

முதல்முறை எம்எல்ஏவான ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராகியிருக்கிறார். அவர்தான் ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன் லால். டிசம்பர் 3 ஆம் தேதியே முடிவு தெரிந்த பிறகும் யார் ராஜஸ்தானின் முதலமைச்சர் என்ற கேள்விக்கு தற்போது விடையளித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

BJP
BJPpt desk

முன்னாள் முதல்வர் வசுந்த்ரா ராஜே உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு அடிபட்ட நிலையில், சங்கனேரி தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்ப்டடுள்ள 56 வயதாகும் பஜன்லால் ஷர்மா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தின் குழுப் புகைப்படத்தில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்தவர்தான் இன்று மாநிலத்தின் முதலமைச்சராகியிருக்கிறார்.

பஜன்லால் சர்மா
ராஜஸ்தான்: புதிய முதல்வராக பஜன் லால் சர்மா தேர்வு!

தியாகுமாரி மற்றும் பிரேம்சந்த் Bairwa ஆகியோர் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளனர். Vasuder Devnanl சட்டப்பேரவை சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள ஷர்மா, Sanganer தொகுதியில் 48 ஆயிரத்து 81வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக உள்ள இவர், நான்கு முறை இப்பொறுப்பை வகித்துள்ளார். இவர் 1993 ஆம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com