சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல்... காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல்... காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல்... காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய துணை ராணுவப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை என சுமார் 65 ஆயிரம் வீரர்களும், சத்தீஸ்கர் மற்றும் பிற மாநில காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லையொட்டிய பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்டத் தேர்தலில் 10 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 8 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com