முதலில் மம்தா பானர்ஜி! இன்று சுவேந்து அதிகாரி! இருமுறை திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம்!

முதலில் மம்தா பானர்ஜி! இன்று சுவேந்து அதிகாரி! இருமுறை திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம்!
முதலில் மம்தா பானர்ஜி! இன்று சுவேந்து அதிகாரி! இருமுறை திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம்!
Published on

மேற்கு வங்கத்தில் ரயில்வே மேம்பாலம் ஒன்றை கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்த நிலையில், இன்று மீண்டும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி திறந்துவைத்துள்ள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கமர்குண்டு ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. கடந்த வாரம் இந்த மேம்பாலத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணா அவர்களும் மம்தா பானர்ஜியுடன் இணைந்து மேம்பாலத்தை திறந்து வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று கிழக்கு ரயில்வே தரப்பில் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. திட்டச் செலவில் 60 சதவீதத்தை தாங்களே ஏற்றுக்கொண்டதாக அந்தக் கடிதத்தில் கிழக்கு ரயில்வே குறிப்பிட்டிருந்தது.

ஆனால், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவுக்கு மேற்கு வங்க அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படாததால், ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே திறந்து வைத்தார். இதையடுத்து பாலத்திற்கு அதிக செலவு செய்தது தாங்கள்தான் என்பதால் கிழக்கு ரயில்வே தரப்பில் பாலத்தை மீண்டும் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

2வது திறப்பு விழாவிற்கு மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். கடந்த வாரம் மம்தா பானர்ஜியால் திறந்து வைக்கப்பட்ட அதே ரயில்வே மேம்பாலத்தை மீண்டும் சுவேந்து அதிகாரி திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com