கொரோனா பாதிக்கப்பட்டதாக சந்தேகத்தின்பேரில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர் மரணமடைந்துள்ளதாக கர்நாடக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவத் தொடங்கியது. அதிகப்படியாக சீனாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இதனால் பல்வேறு நாட்டிற்கு செல்ல பல கெடுபிடிகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டதாக சந்தேகத்தின்பேரில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் 76 வயது முதியவர் முகமது உசேன் சித்திக். இவர் சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அந்த முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். இருந்தாலும் அவர் கொரோனா பாதிப்பால்தான் உயிரிழந்துள்ளார் என்று முடிவாகவில்லை. இதனால் இந்தியாவிலும் முதல் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழும்பியுள்ளது.