13 திருக்குறள்களை மேற்கோள் காட்டி புதுச்சேரி பேரவையில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை

13 திருக்குறள்களை மேற்கோள் காட்டி புதுச்சேரி பேரவையில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை
13 திருக்குறள்களை மேற்கோள் காட்டி புதுச்சேரி பேரவையில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை
Published on

புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரை தமிழில் அமைந்தது. பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, 13 திருக்குறள்களை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

புதுச்சேரி மாநிலத்தின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்ற திருக்குறளுடன் உரையை தொடக்கிய ஆளுநர் தமிழிசை, அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டார். அப்போது 13 முறை திருக்குறளை மேற்கோள் காட்டி ஆளுநர் தமிழிசை உரையாற்றினார்.

புதிய அரசு, புதுச்சேரியின் வளர்ச்சி மற்றும் அமைதி சிறந்து விளங்க பாடுபடும் என்று நம்புவதாக அவர் கூறினார். 2020-21 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடான 9,000 கோடிரூபாயில் அரசு 8,342 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், புதிய காவலர்களை தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய ஆளுநர், சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை 33 கோடி ரூபாய் செலவில் தூர்வார ஆணை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

75 நிமிட உரையை ஆளுநர் நிறைவு செய்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக ராஜவேலு தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com