அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் வரும் செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துவிட்ட நிலையில் அதன் விலையும் உயர்ந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா முதன்முறையாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஏற்கனவே தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளும் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில்லை என்ற 40 ஆண்டுகால முடிவை அமெரிக்கா கடந்தாண்டு இறுதியில் கைவிட்டது. இது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.