மும்பை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்படிருந்த ரயில் பெட்டியில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதன் என்ஜின் பகுதியை ஒட்டிய பெட்டியில் முதலில் தீப்பற்றியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி கரும்புகையுடன் அடுத்தடுத்து 4 பெட்டிகளுக்கும் பரவியது.
பின்னர் அங்குவந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கப் போராடினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பயணிகள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் தீவிபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.