பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் சிங்கார் சினிமா என்ற தியேட்டர் இருக்கிறது. இந்த தியேட்டரின் அருகே வணிக வளாகம் ஒன்று இருக்கிறது. இன்று அதிகாலையில் இந்த வணிக வளாகம் தீப்பற்றி எரிந்தது. அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்க போராடினர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. 12 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.
வணிக வளாகத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.