கர்நாடகா|மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடகாமுகநூல்
Published on

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர் ராஜ்குமார் சாலையில் இயங்கிவரும் மின்சார இருசக்கர வாகன ஷோரூமில், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென ஷோரூம் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து, அதில் பணிபுரிந்த சிலர், கட்டடத்தை விட்டு வெளியே ஓடி உயிர் தப்பினர்.

கர்நாடகா
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ To 'வக்ஃப் வாரியம்’ - குளிர்கால கூட்டத்தொடருக்கு காத்திருக்கும் மசோதாக்கள்!

எனினும், வாகன விற்பனையாளராக பணிபுரிந்த பிரியா என்ற இளம்பெண், தீயில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதற்கிடையே, தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com