டெல்லி ஜந்தர்மந்தரில் 10 ஆயிரம் சம்பளம் மற்றும் பிபிஇ கிட் ஆகியவை கேட்டு போராடிய 100 தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய தூய்மைப்பணியாளர் ஒருவர் “ கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும், பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும் என்று பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால்தான் போராட்டம் நடத்தினோம்” என தெரிவித்தார். ஜூலை 21 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திய இவர்கள் மீது கொரோனா பொதுமுடக்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.