2020-2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட் உரையிலேயே இதுதான் மிக நீண்ட உரை என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 42 நிமிடம் எடுத்துக் கொண்டார். காலை 11 மணிக்கு உரையை தொடங்கி, மதியம் 1 ஒரு 42 நிமிடங்கள் வரை வாசித்தார். இருப்பினும், கடைசி ஒரு பக்கத்தை இவர் படிக்கவில்லை. இவர் பட்ஜெட்டை படிக்கும் போது, சோர்ந்து போனதால், இன்னும் இரண்டு பக்கம்தான் இருக்கிறது என கூறி தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
இதற்கு முன் நிர்மலா சீதாராமன் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது 2.15 மணி நேரம் எடுத்துக் கொண்டார். இதுவரை எந்தவொரு நிதி அமைச்சரும் எடுத்துக்கொள்ளாத நேரத்தை எடுத்துக்கொண்டு தனது பட்ஜெட் உரையை மேலும் இரண்டு பக்கங்கள் இருக்கும்போது, தனது பேச்சை நிறுத்திக்கொண்டார்.
இதுவரை வரலாற்றிலேயே ஜஷ்வந்த் சிங், அருண் ஜேட்லி ஆகியோர் 2 மணி நேரம் மற்றும் சற்றே கூடுதலாக எடுத்துக்கொண்டு பட்ஜெட் உரையை நிறைவு செய்தனர். ஆனாலும், நிர்மலா சீதாராமனின் இந்த 2.42 நிமிட உரைதான் மிகவும் நீண்டது என தெரிகிறது.