புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
Published on

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 90 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்துக்கு பதிலாக புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

888 பேர் அமரும் வகையில் பிரமாண்ட மக்களவை, 384 பேர் அமரும் வகையில் மாநிலங்களவையும் கொண்ட நாடாளுமன்ற கட்டடம், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் கடந்த 1921ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வினால் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது அமைந்துள்ள கட்டடத்தின் அருகில், சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படவுள்ளது. கட்டுமானத்திற்கான ஒப்பந்தப் பணிகள் டாடா லிமிடெட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

4 அடுக்கு மாடிகளுடன் 64 ஆயிரத்து 500 சதுர அடியில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

இந்தக் கட்டடம் கட்டுவதற்கான செலவு 971 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வரும் 2022ஆம் ஆண்டு சுதந்திரத்தினத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கோண வடிவில் அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பிரமாண்ட அரங்கு, ஒரு நூலகம், பல்துறை கமிட்டி அறைகள், உணவு அருந்தும் அறைகள், பார்க்கிங் வசதிகள், அனைத்து எம்பிக்களுக்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனித்தனி அலுவலகங்கள் போன்றவையும் இடம்பெற உள்ளன.

குடியரசுத் தலைவர், பிரதமருக்கான சிறப்பு நுழைவாயில்களுடன் சேர்த்து கட்டடத்தில் 6 நுழைவாயில்கள் இருக்கும். மேலும், நெருப்பு, நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமையுடன் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது 543 மக்களவை உறுப்பினர்களும், 245 மாநிலங்களவை உறுப்பினர்களுமே உள்ள நிலையில், எதிர்காலத்தில் தொகுதி விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு, 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரமாண்ட மக்களவை அறை, 384 உறுப்பினர்கள் அமரும் வகையில் மாநிலங்களவையும் அறையும் அமைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com