போலி செய்திகள்: தேர்தல் கமிஷனுக்கு உதவ பேஸ்புக், ட்விட்டர் உறுதி

போலி செய்திகள்: தேர்தல் கமிஷனுக்கு உதவ பேஸ்புக், ட்விட்டர் உறுதி
போலி செய்திகள்: தேர்தல் கமிஷனுக்கு உதவ பேஸ்புக், ட்விட்டர் உறுதி
Published on

தேர்தலின் புனிதத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த செயலையும் தங்கள் தளங்களில் அனுமதிக்க மாட்டோம் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உறுதியளித்துள்ளன.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடக்கும் 48 மணி நாட்களுக்கு முன்பே பிரசாரம் நிறுத்தப்பட்டு விடும். ஆனால், சமூக வலைத்தளங்கள் இந்த பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு வாக்காளர்களை ஏமாற்றும் போலி செய்திகளும் பரப்பப்படுகின்றன. இது தேர்தல் கமிஷனுக்கு தலைவலியாக இருந்தது. 

இந்நிலையில் போலியான வாட்ஸ்ஆப் செய்திகளின் மூலம், கும்பல்கள் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. அதை அந்நிறுவனம் ஏற்று செயல்பட்டு வருகிறது. 

இதே போல பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்களையும் செயல்பட வைக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக, மூத்த இணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில் அந்நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றக் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அந்நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்துக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளன.

வாக்காளர்களை ஏமாற்றும் வகையிலான போலி செய்திகளையும் தேர்தலின் புனிதத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக எந்த செயலை யும் அனுமதிக்கமாட்டோம் என்று அந்நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. இத்தகவலை தலைமை தேர்தல் அணையர் ஓபி ராவத் தெரிவித்து ள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, கர்நாடக தேர்தலின் போது இது பரிசோதனை செய்யப் பட்டதாகவும் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட இருப்பதாகவும் சொன்னார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com