பப்ஜிக்கு போட்டியாக இந்தியாவின் FAU-G! என்ற ஆன்லைன் கேம் தயாராகியுள்ள நிலையில், எப்போது முதல் இது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 செப்டம்பர் மாதம் 100க்கும் மேற்பட்ட சீன நாட்டின் மொபைல் போன் செயலிகளுக்கு தடைவிதித்தது இந்திய அரசு. அந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பெரும்பாலான செயலிகள் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போயின. அதில் பிரபலமான ஆன்லைன் மல்டிப்ளேயர் விளையாட்டான பப்ஜியும் ஒன்று. இது சீனாவுக்கு எதிராக இந்திய தொடுத்துள்ள டிஜிட்டல் போர் எனவும் சொல்லப்பட்டது.
தலைமையிடமாக கொண்டு இயங்கும் nCore கேம்ஸ் என்ற நிறுவனம் இந்த FAU-G விளையாட்டை வடிவமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்ற காள்வான் பள்ளத்தாக்கு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரும் குடியரசு தினத்தன்று இந்த கேம் பொது பயன்பாட்டிற்கு ப்ளே ஸ்டோரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமை அதன் தூதுவரும், 2.0 படத்தில் பக்ஷி ராஜனாக நடித்த நடிகர் அக்ஷய் குமார் வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு ப்ளே ஸ்டோரில் இந்த கேமை இன்ஸ்டால் செய்து கொள்ள முன்பதிவு கலை கட்டி வருகிறது.