இன்று நள்ளிரவு முதல் கட்டாயமாகிறது ஃபாஸ்டேக் முறை!

இன்று நள்ளிரவு முதல் கட்டாயமாகிறது ஃபாஸ்டேக் முறை!
இன்று நள்ளிரவு முதல் கட்டாயமாகிறது ஃபாஸ்டேக் முறை!
Published on

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. வங்கிகள், சுங்கச்சாவடிகள், தனியார் சேவை மையங்களில் ஆதார் அட்டை மற்றும் வாகனங்களின் ஆர்.சி. நகலைக் கொடுத்து ஃபாஸ்டேக் மின்னணு அட்டைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

ஃபாஸ்டேக் முறையால் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது ரேடியோ அதிர்வெண் உதவியுடன் தானியங்கி தடுப்புகள், விலகும் என்பதால், போக்குவரத்து நெரிசல் மட்டும் இன்றி, காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. ஓராண்டாக ஃபாஸ்டேக் முறை அமலில் உள்ள நிலையில் 80 சதவீதம் பேர் மட்டுமே, ஃபாஸ்ட்டேக் மின்னணு அட்டையை பயன்படுத்துவதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறுகள் முற்றிலும் களையப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் வாகன ஓட்டிகள், ஃபாஸ்டேக் முறையை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும், கட்டாயமாக்க கூடாதென்றும் வலியுறுத்துகின்றனர். ஃபாஸ்டேக் அட்டையைப் பெற்றிட மேலும் கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஃபாஸ்டேக் நடைமுறை பயணத்தை எளிமையாக்கும் திட்டம் என்றாலும், அனைத்து தரப்பினரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கட்டமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com