சட்டப்பிரிவு 370 ரத்தானதற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து, முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சியுடன் மக்கள் இருப்பதாக அதன் மூத்தத் தலைவர் ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரில், இந்துகள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நம்பிக்கை ஏற்படுத்துவோம் என தேசிய மாநாட்டுக்கு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர், முதல்முறையாக காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக்கு கட்சி 40க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியுடன் மக்கள் இருப்பதாக தெரிவித்தார்.
காஷ்மீரில், காவல்துறை ராஜ்ஜியம் இல்லை என்றும், இனி, மக்களின் ராஜ்ஜியம்தான் நடைபெறும் என்றும் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஓமர் அப்துல்லா முதலமைச்சராவார் என்றும் அவர் கூறினார்.