ஜன.26 ல் டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி : விவசாய சங்கங்கள் அழைப்பு

ஜன.26 ல் டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி : விவசாய சங்கங்கள் அழைப்பு
ஜன.26 ல் டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி : விவசாய சங்கங்கள் அழைப்பு
Published on

தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் மற்றும் அரசாங்கத்தின் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விவசாயிகள் சங்கங்கள் தங்கள் நிலைப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளன. அதன்படி வரும் ஜனவரி 26 - குடியரசு தினத்தன்று தேசிய தலைநகரை நோக்கி டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன, அதற்கு 'கிசான் அணிவகுப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை தில்லி எல்லைகளில் தங்கியிருப்போம் என்றும் உழவர் சங்கங்கள் தெரிவித்தன.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜனவரி 26 ஆம் தேதி ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பிரதம விருந்தினராக டெல்லிக்கு வருகைதர உள்ளார். டெல்லியின் பிரஸ் கிளப்பில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய விவசாயிகள் சங்க தலைவர் தர்ஷன் பால் சிங்,  "நாங்கள் அமைதியாக இருந்தோம், அமைதியானவர்களாக இருக்கிறோம், அமைதியாகவே இருப்போம், ஆனால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை டெல்லி எல்லையில் தங்குவோம். ஜனவரி 26 அன்று  நடைபெறவுள்ள தேசியக் கொடியுடன் கூடிய டிராக்டர் அணிவகுப்பு" கிசான் பரேட் "என்று அழைக்கப்படும், இது குடியரசு தின அணிவகுப்புக்குப் பின்னர் நடைபெறும் என்றும் கூறினார்" என்று அவர் கூறினார்.

மற்றொரு விவசாயிகள் தலைவர் குர்னம் சிங் சோடுனி  “அரசுடனான கடைசி பேச்சுவார்த்தையில், எம்.எஸ்.பி-யில் 23 பயிர்களை வாங்குவீர்களா என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினோம். அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். அப்படியானால் நீங்கள் ஏன் நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை அளிக்கிறீர்கள்?  என கேள்வி எழுப்பினோம். இதுவரை, எங்கள் போராட்டத்தின் போது 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்," என்று அவர் கூறினார். ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், விவசாயிகளின் கோரிக்கைகளில் 50 சதவீதத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது  என சொல்வது ஒரு “தெளிவான பொய்” என்றார். "எங்களுக்கு இன்னும் காகிதத்தில் எதுவும் கிடைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com