ஆந்திராவில் விவசாய நிலத்தை உழவு செய்வதற்கு தன் சொந்த மகள்களைக் கட்டாயப்படுத்திய விவசாயி ஒருவரின் செயல் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த விவசாயியிக்கு மாடுகளைக் கொண்டு உழுவதற்கு போதுமான பண வசதியில்லை. ஊரடங்கு காரணமாக வருமானமும் குறைந்துவிட்டது. கையில் அரைக்காசு இல்லாமல் தவித்த விவசாயி, தன் மகள்களைக் கட்டாயப்படுத்தி ஏரு பூட்டிவிட்டார்.
நகரத்தில் அவர் நடத்திவந்த டீக்கடையை ஊரடங்கு காரணமாக மூடும் நிலை ஏற்பட்டதால், பிழைப்பதற்காக சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார் அந்த விவசாயி.